/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது வெளியில் கழிவுநீர் ஊற்றிய லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு
/
பொது வெளியில் கழிவுநீர் ஊற்றிய லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு
பொது வெளியில் கழிவுநீர் ஊற்றிய லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு
பொது வெளியில் கழிவுநீர் ஊற்றிய லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஆக 25, 2024 11:28 PM

மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சி, சிப்காட் பகுதியில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு செங்கை புறநகர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த சிப்காட் பகுதியில், காலியாக உள்ள இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் தனியார் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீர், தனியார் தொழிற்சாலைகளின் ரசாயனம் கலந்த கழிவுநீர் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக மறைமலை நகர் 'டென்சி' முத்துராமலிங்க தேவர் தெருவில் கழிவுநீர் ஊற்றுவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக இந்தவழியாக வேலைக்கு செல்லும் பணியாளர்கள் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று போன்றவற்றால் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், சிப்காட் பகுதியில் மறைமலை நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது இரண்டு தனியார் கழிவுநீர் லாரிகள் முத்துராமலிங்க தேவர் சாலையில் கழிவுநீரை ஊற்றிக் கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற லாரி ஓட்டுனர்களை மடக்கி பிடித்து,இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து போலீசார் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு லாரிகளும் பேரமனூர் பகுதியைச் சேர்ந்த கலை, 29; மற்றும் சித்தமனூர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ், 55.; என்பது தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

