/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வழி தவறிய குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
/
வழி தவறிய குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
வழி தவறிய குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
வழி தவறிய குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
ADDED : மே 07, 2024 09:49 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், நேற்று முன்தினம் மாலை, 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை அழுதபடி நின்று கொண்டிருந்தது.
அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த செங்கல்பட்டு நகர காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, குழந்தையை அழைத்து, பெற்றோர் பற்றி விபரம் கேட்டார்.
குழந்தை ஏதும் கூறாமல் அழுததால், குழந்தையை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அமர வைத்திருந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு பெரியமணியக்கார தெருவை சேர்ந்த ராஜசேகர் மனைவி ரேகா, 26, என்பவர், தன் ஆண் குழந்தையை காணவில்லை என, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழுதபடி புகார் அளிக்க வந்தார்.
காவல் நிலையத்தில் குழந்தை இருப்பதை கண்ட ரேகா, போலீசாரிடம் விபரத்தை கூறினார்.
இதையடுத்து, விசாரணைக்கு பின் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு குறித்து அறிவுரை கூறிய போலீசார், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.