/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடை கட்டடம் பாழ் ஈசூர் பயனாளிகள் அவதி
/
ரேஷன் கடை கட்டடம் பாழ் ஈசூர் பயனாளிகள் அவதி
ADDED : மே 31, 2024 03:34 PM

சித்தாமூர் :சித்தாமூர் அருகே ஈசூர் கிராமத்தில், நுாலகம் அருகே நியாய விலை கடை செயல்படுகிறது. இதில், 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.
இந்த நியாய விலைக் கடை, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
முறையான பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்தும், மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.
மேலும், மழைக் காலங்களில், மேல் தளத்தில் தண்ணீர் பெருக்கெடுப்பதால், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை நனையாமல் பாதுகாப்பது சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.