/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நக்கீரன் தெருவில் கழிவுநீர் தேக்கம் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் அவதி

ADDED : ஆக 18, 2024 12:43 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் சிக்னல் அருகில் உள்ள நக்கீரன் தெருவில், அதிகமான வீடுகள் உள்ளன. இந்த தெருவை பயன்படுத்தி, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தெருவில் உள்ள தனி நபரின் வீட்டில் இருந்து, கழிப்பறை நிரம்பி, தெருவில் துர்நாற்றத்துடன் வழிந்தோடுகிறது. இதனால், அந்த தெருவையே பயன்படுத்த முடியாமல், அப்பகுதிவாசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக, நக்கீரன் தெருவில், தனி நபர் ஒருவர் வீட்டு கழிப்பறை நிரம்பி, கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அவதிப்பட்டு வருகிறோம்.
தினசரி மக்கள் பயன்படுத்தும் தெருவில், கழிவுநீர் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தனிநபரின் வீட்டிலிருந்து வெளியேறி, சுகாதார சீர்கேடு விளைவிக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.