/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வங்கியில் தீ கூரை, 'ஏசி' எரிந்து நாசம்
/
வங்கியில் தீ கூரை, 'ஏசி' எரிந்து நாசம்
ADDED : ஆக 03, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுங்கம்பாக்கம்:கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. நேற்று காலை, 8:30 மணிக்கு, வங்கியில் திடீரென தீப்பற்றியது.
இதுகுறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் பில்லர் தீயணைப்பு வீரர்கள், வாகனங்களுடன் விரைந்தனர். அரை மணி நேரம் போராடி, தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
பால்சீலிங் எனும் தற்காலிக கூரை, 'ஏசி' மற்றும் இன்டர்நெட் கேபிள்கள், தீயில் எரிந்து நாசமாகின. இதனால், பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளுக்காக வந்த வாடிக்கையாளர்கள், மிகவும் சிரமப்பட்டனர்.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.