/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெற்றோர் ஜாமின் எடுக்காததால் வீட்டை சூறையாடிய வாலிபர்
/
பெற்றோர் ஜாமின் எடுக்காததால் வீட்டை சூறையாடிய வாலிபர்
பெற்றோர் ஜாமின் எடுக்காததால் வீட்டை சூறையாடிய வாலிபர்
பெற்றோர் ஜாமின் எடுக்காததால் வீட்டை சூறையாடிய வாலிபர்
ADDED : ஏப் 26, 2024 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு:திருவேற்காடு, அர்ஜுனா மேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 25. இவர், கடந்த மாதம் திருவேற்காடில், கஞ்சா விற்ற வழக்கில் சிக்கி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், நேற்று முன்தினம் விடுதலையானார்.
வீட்டிற்கு வந்த அருண்குமார், சிறையில் இருந்து தன்னை உடனடியாக ஜாமினில் எடுக்காமல் இருந்த பெற்றோருடன், தகராறு செய்தார்.
அதை தொடர்ந்து, வீட்டில் இருந்த டிவி' பீரோ என, அனைத்து பொருட்களையும் துாக்கி வெளியே வீசி சேதப்படுத்தினார். மேலும், வீட்டின் ஜன்னல், கதவு ஆகியவற்றையும் சூறையாடினார்.
இதுகுறித்த புகாரின்படி, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.