/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
/
பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
ADDED : மே 28, 2024 06:48 AM

திருவாலங்காடு, : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி, 22. இவர், பட்டாக்கத்தியுடன் திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரிவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இவர் சில நாட்களுக்கு முன், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராமில்' பட்டாக்கத்தியுடன் உள்ள வீடியோவை பதிவு செய்தார்.
இது குறித்து, திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. நேற்று முன்தினம் இரவு இவர், திருவள்ளூர் --அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்த கூடல்வாடி பேருந்து நிறுத்தத்தில் இருந்தார்.
அப்போது அவரை, திருவாலங்காடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.