/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்டம் பிரிந்து 5 ஆண்டாகியும் பிரிக்கப்படாத சுற்றுலா அலுவலகம்
/
மாவட்டம் பிரிந்து 5 ஆண்டாகியும் பிரிக்கப்படாத சுற்றுலா அலுவலகம்
மாவட்டம் பிரிந்து 5 ஆண்டாகியும் பிரிக்கப்படாத சுற்றுலா அலுவலகம்
மாவட்டம் பிரிந்து 5 ஆண்டாகியும் பிரிக்கப்படாத சுற்றுலா அலுவலகம்
ADDED : ஆக 28, 2024 08:13 PM
மாமல்லபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, சுற்றுலா அலுவலர் நியமிக்கப்படுவது தாமதமாகிறது.
தற்போதைய காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தது. மாமல்லபுரம் பல்லவர் சிற்பங்கள், முட்டுக்காடு படகு குழாம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதிகள் தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன.
கைலாசநாதர், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் உள்ளிட்ட கோவில்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. ஆனால், மாமல்லபுரத்தில், மாவட்ட சுற்றுலா அலுவலம் இயங்கி வருகிறது. அங்கு, இரு மாவட்டங்களுக்குமான சுற்றுலா அலுவலர் உள்ளார்.
கடந்த 2019 நவ.,ல், காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அலுவலகம், செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் இயங்குவதால், மாவட்ட சுற்றுலா அலுவலகம் தொடர்கிறது.
இதையடுத்து, தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, மாவட்ட சுற்றுலா அலுவலகம், காஞ்சிபுரத்தில் தனியாக அமைக்க வேண்டும். மாவட்டத்தை பிரித்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலா அலுவலகம் அமைக்கவில்லை.
செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா அலுவலரே, காஞ்சிபுரத்திற்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். அதனால், நிர்வாக சிக்கல், பணி தாமதம் ஏற்படுகிறது. சுற்றுலா மேம்பட்டு வரும் சூழலில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தனியாக சுற்றுலா அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், புதிதாக உருவான கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள், தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் ஆகியவற்றுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலகம் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.