ADDED : ஜூலை 26, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:தாம்பரம், படப்பை அடுத்த ஆரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரிச்சர்ட். அவரது மனைவி மீனாட்சி, 36; தனியார் ஊழியர். இவர்களது மகன் தோனி, 12; படப்பையில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
தோனி சரியாக படிக்காததால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தோனி, கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகன் இறந்த சோகத்தில் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி, நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.