/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையிலேயே தீப்பற்றி டூ - வீலர் எரிந்து நாசம்
/
சாலையிலேயே தீப்பற்றி டூ - வீலர் எரிந்து நாசம்
ADDED : ஆக 27, 2024 01:06 AM

செங்கல்பட்டு : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் மாலை, 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில், தாம்பரம் நோக்கி அடையாளம் தெரியாத நபர் சென்று கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு - -காஞ்சிபுரம் சாலை மேம்பாலம் மீது வந்த போது, பைக் ஒயர்களில் மின் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.
உடனே, பைக்கை ஓட்டி வந்த நபர், சாலை ஓரம் பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பைக்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இருப்பினும், பைக் முழுதும் எரிந்து நாசமானது. பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோடிய நபர் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.