/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடியில் இருந்து விழுந்தவர் பலி
/
மாடியில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : மே 28, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை:தாம்பரம் சானடோரியம், துர்கா நகரைச் சேர்ந்தவர் முகமது யாஷிம், 50. மின்ட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், போதையில் இருந்த முகமது யாஷிம், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், முகமது யாஷிம் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.