/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சகதியாக மாறிய குடிநீர் தொட்டி களத்தில் இறங்கிய கிராம மக்கள்
/
சகதியாக மாறிய குடிநீர் தொட்டி களத்தில் இறங்கிய கிராம மக்கள்
சகதியாக மாறிய குடிநீர் தொட்டி களத்தில் இறங்கிய கிராம மக்கள்
சகதியாக மாறிய குடிநீர் தொட்டி களத்தில் இறங்கிய கிராம மக்கள்
ADDED : செப் 14, 2024 08:01 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த செம்பூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறு மற்றும் பாலாற்றில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.
அதன்பின், குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிகளை மாதம் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை,
ஆனால், செம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளை, ஊராட்சி நிர்வாகம் முறையாக சுத்தம் செய்வதில்லை என, கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த சில நாட்களாக குழாய்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படும் குடிநீர் மாசடைந்து காணப்பட்டது. நேற்று காலை கிராம மக்கள் குடிநீர் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்தனர்.
அப்போது, பல நாட்களாக தொட்டி துாய்மைப்படாமல் இருந்ததால், சேறும், சகதியுமாக காட்சியளித்தது. பின், ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, குடிநீர் தொட்டி துாய்மைப்படுத்தப்பட்டது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.