/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரெட்டிக்குப்பம் கிராமத்தில் மூன்று வீடுகளில் திருட்டு
/
ரெட்டிக்குப்பம் கிராமத்தில் மூன்று வீடுகளில் திருட்டு
ரெட்டிக்குப்பம் கிராமத்தில் மூன்று வீடுகளில் திருட்டு
ரெட்டிக்குப்பம் கிராமத்தில் மூன்று வீடுகளில் திருட்டு
ADDED : ஆக 17, 2024 07:59 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரஜித், 59. கடந்த 14ம் தேதி மாலை, குடும்பத்துடன் திருவள்ளூரில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு சென்று, அங்கிருந்த உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
நேற்று காலை, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகள், வெள்ளி டம்ளர், கிண்ணம் உள்ளிட்ட 500 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்ச ரூபாய் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அதே போல, அருகில் பூட்டப்பட்டு இருந்த இரண்டு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, கொள்ளை முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.
இது குறித்து, இந்திரஜித் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.