/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சரக்கு வாகனத்தில் பேட்டரி திருட்டு
/
சரக்கு வாகனத்தில் பேட்டரி திருட்டு
ADDED : ஜூலை 15, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு பெரிய நத்தம் தட்டான்மலை தெருவைச் சேர்ந்தவர் விஜய், 32. இவர், 'டாடா மேஜிக்' சரக்கு வாகனத்தில், இதே பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார். நேற்று காலை வாகனத்தை பார்த்த போது, 40,000 ரூபாய் மதிப்பிலான பேட்டரி திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.