/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் கல்லுாரியில் இயந்திரங்கள் திருட்டு
/
தனியார் கல்லுாரியில் இயந்திரங்கள் திருட்டு
ADDED : ஜூலை 06, 2024 12:45 AM
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மரைன் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரி, கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 30ம் தேதி காலை, பூட்டிக்கிடந்த கல்லுாரி வளாகத்திற்குள் நுழைந்து, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கிரைண்டிங் இயந்திரங்களை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று கல்லுாரி வளாகத்தை பார்வையிட வந்த உரிமையாளர் பாண்டியன், இயந்திரங்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின், அது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.