/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோர குப்பை கழிவுகள் தீயிட்டு எரிப்பதால் கடும் அவதி
/
சாலையோர குப்பை கழிவுகள் தீயிட்டு எரிப்பதால் கடும் அவதி
சாலையோர குப்பை கழிவுகள் தீயிட்டு எரிப்பதால் கடும் அவதி
சாலையோர குப்பை கழிவுகள் தீயிட்டு எரிப்பதால் கடும் அவதி
ADDED : மே 19, 2024 01:28 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்குளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் பிரதான சாலையோரம் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்றாமல், தொடர்ந்து காயரம்பேடு ஊராட்சி சார்பில் குப்பையை தீயிட்டு எரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஊராட்சி சார்பில் குப்பை கழிவுகளை முறையாக சேகரிக்க வருவதில்லை. இதனால், இப்பகுதிவாசிகள் வீடுகளில் உள்ள குப்பை கழிவுகளை, நெல்லிக்குப்பம் சாலையோரம் வீசி செல்கின்றனர்.
இவ்வாறு போடப்படும் குப்பை கழிவுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஊராட்சி நிர்வாகம் இதையும் அகற்றாமல், துாய்மை பணியாளர்கள் அதை தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
இதனால், குப்பையில் தீ எரிந்து, அதில் இருந்து கரும்புகை வெளியேறி அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுகின்றன.
இது குறித்து காயரம்பேடு ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சாலையில் தேங்கியுள்ள குப்பையில் தீ வைத்து கொளுத்துவதை நிறுத்திவிட்டு, குப்பையை உடனுக்குடன் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

