/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒன்றிய கவுன்சிலரும் இல்லை, ஊராட்சி தலைவரும் இல்லை; வண்டலுாரில் வளர்ச்சி பணிகள் முடக்கம்
/
ஒன்றிய கவுன்சிலரும் இல்லை, ஊராட்சி தலைவரும் இல்லை; வண்டலுாரில் வளர்ச்சி பணிகள் முடக்கம்
ஒன்றிய கவுன்சிலரும் இல்லை, ஊராட்சி தலைவரும் இல்லை; வண்டலுாரில் வளர்ச்சி பணிகள் முடக்கம்
ஒன்றிய கவுன்சிலரும் இல்லை, ஊராட்சி தலைவரும் இல்லை; வண்டலுாரில் வளர்ச்சி பணிகள் முடக்கம்
ADDED : மார் 04, 2025 07:20 PM
வண்டலுார்:ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சி தலைவர் ஆகிய இரண்டு மக்கள் பிரநிதிகளும் இல்லாமல், வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளதாக, வண்டலுார் பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் மொத்தமுள்ள 39 ஊராட்சிகளுக்கும், 24 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் உள்ளன.
இதில், வண்டலுார் ஊராட்சி, காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் இரண்டாவது வார்டுக்கு உட்பட்டது. இங்கு 232 தெருக்களில் தற்போது 40, 000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.
கடந்த 2021ல் நடந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த ஆராமுதன் வண்டலுார், இரண்டாவது வார்டு, ஒன்றியக் கவுன்சிலராகவும், அதே கட்சியை சேர்ந்த முத்தமிழ் செல்வி வண்டலுார் ஊராட்சி தலைவராகவும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், அதிகார போட்டி மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், ஒன்றியக் கவுன்சிலரான ஆராமுதன், கடந்த 2024, பிப். 29ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், வண்டலுார் ஊராட்சி தலைவர் முத்தமிழ் செல்வி கைது செய்யப்பட்டு, சிறை சென்று, தற்போது ஜாமினில் உள்ளார்.
இதனால், முத்தமிழ் செல்வியின் ஊராட்சி தலைவர் அதிகாரம் பறிக்கப்பட்டது. ஆராமுதன் கொல்லப்பட்டதால், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட வண்டலுார் ஒன்றியக் கவுன்சிலர் பதவி காலியானது.
தொடர்ந்து, இடைத் தேர்தல் நடத்தப்படும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநில தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் பணிகளை முன்னெடுக்கவில்லை.
இதனால், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் என, இரண்டு மக்கள் பிரநிதிகளும் இல்லாமல், வண்டலுார் ஊராட்சியின் ஒட்டு மொத்த வளர்ச்சி பணிகளும் முடங்கி விட்டதாக பகுதிவாசிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ஓர் ஊராட்சிக்கு தேவையான சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, கால்வாய், சுகாதார மையம் உள்ளிட்ட அடிப்படை கட்டுமான பணிகள் அனைத்தும் மத்திய மாநில அரசின் பல்வேறு நிதி ஆதாரங்கள் வாயிலாக கட்டமைக்கப்படுகின்றன.
இந்த நிதி ஆதாரங்களைப் பெற்று தந்து, பணிகளை முன்னெடுக்க ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சி தலைவர் ஆகிய இரண்டு மக்கள் பிரதிகளும் தேவை. தவிர, மக்கள், தங்கள் பகுதியின் வளர்ச்சி சார்ந்து, உள்ளாட்சி மக்கள் பிரநிதிகளிடம் எளிதில் முறையிடலாம்.
ஆனால், கடந்த 12 மாதங்களாக வண்டலுார் ஊராட்சியில் ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சி தலைவர் என, இரண்டு மக்கள் பிரநிதிகளும் இல்லாததால், ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் முடங்கி விட்டன.
பார்லிமென்ட் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, மரணமடைந்தாலோ, அந்த தொகுதியில் அடுத்த ஆறு மாதங்களுக்குள், தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்துகிறது.
ஆனால், உள்ளாட்சி பிரநிதிகள் விஷயத்தில் அதே நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைபிடிப்பதில்லை. இது அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், ஜனநாயக மாண்பிற்கு முரணாகவும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.