/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரியில் சிக்கிய திருடன் கீழே விழுந்து கால் முறிவு
/
பொத்தேரியில் சிக்கிய திருடன் கீழே விழுந்து கால் முறிவு
பொத்தேரியில் சிக்கிய திருடன் கீழே விழுந்து கால் முறிவு
பொத்தேரியில் சிக்கிய திருடன் கீழே விழுந்து கால் முறிவு
ADDED : மார் 07, 2025 01:25 AM

மறைமலைநகர்:மறைமலைநகர் காவல் நிலைய குற்றப் பிரிவு போலீசார், பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, பொத்தேரி ரயில் நிலையம் அருகில் நடந்து வந்த நபர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினார்.
துரத்திச் சென்ற போலீசார், பொத்தேரி ரயில் நிலைய நடைமேடையில் அந்த நபரை பிடிக்கும் போது, அவர் தவறி கீழே விழுந்தார்.
அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்தனர்.
இதில், பிடிபட்ட நபர் சென்னை, எம்.கே.பி.,நகரைச் சேர்ந்த இம்ரான்கான்,39, என்பதும், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
மேலும், இரண்டு மாதங்களுக்கு முன், சிங்கபெருமாள்கோவில் அடுத்த விஞ்சியம்பாக்கத்தில், அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதும் தெரிந்தது.
இம்ரான்கானிடம் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து 16 சவரன் தங்க நகைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரயில்வே நடைமேடையில் தடுக்கி விழுந்ததில், இம்ரான்கான் வலது காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக, போலீசார் தெரிவித்தனர்.