/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நண்பர் கொலைக்கு பழிவாங்க வாலிபரை வெட்டிய மூவர் கைது
/
நண்பர் கொலைக்கு பழிவாங்க வாலிபரை வெட்டிய மூவர் கைது
நண்பர் கொலைக்கு பழிவாங்க வாலிபரை வெட்டிய மூவர் கைது
நண்பர் கொலைக்கு பழிவாங்க வாலிபரை வெட்டிய மூவர் கைது
ADDED : ஜூன் 28, 2024 01:49 AM
முடிச்சூர்:முடிச்சூரை அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 19. கடந்த ஜூன் 23ம் தேதி இரவு, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், விக்னேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜிவ்காந்தி, 31, ஆமோஸ், 30, குமார், 27, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட விக்னேஷின் நண்பர்கள் பழிக்குப்பழி வாங்க, எதிர் தரப்பைச் சேர்ந்த முடிச்சூர், லட்சுமி நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத், 22,என்பவரை, ஜூன் 24ம் தேதி மாலை வெட்டி விட்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த ஸ்ரீநாத், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து, ஸ்ரீநாத்தை வெட்டிய, முடிச்சூர் கம்பர் தெருவைச் சேர்ந்த பிரசாத், 19, காந்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ்குமார், 21, வரதராஜபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி, 21, ஆகிய மூன்று பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள ஒருவரை தேடிவருகின்றனர்.