/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹெராயின் போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது
/
ஹெராயின் போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது
ADDED : மார் 05, 2025 11:39 PM

சென்னை, எழும்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, மூன்று வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.
இதில், மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர். அப்போது, 3 கிராம் ஹெராயின், 8 கிராம் மார்பின் போதைப் பொருள், 2 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹபிபூர் ரகுமான், 32, தில்தார் உசேன், 22, ரெய்கிபுல் இஸ்லாம், 20, என்பது தெரியவந்தது.
நேற்று, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.