/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இறைச்சிக்காக பசு மாடு திருடிய மூவர் கைது
/
இறைச்சிக்காக பசு மாடு திருடிய மூவர் கைது
ADDED : மே 13, 2024 05:56 AM
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த நின்னைகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலா, 43. பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், இவர் பசு மாடுகளை நின்னகரை பகுதியில், மேய்ச்சலுக்கு விட்டு வந்துள்ளார்.
மாலை நீண்ட நேரமாகியும் ஒரு பசு மாடு மட்டும் வராததால், பல இடங்களில் தேடி உள்ளார். பின், மாடு காணாமல் போனது குறித்து, மறைமலை நகர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், நின்னைகாட்டூர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன், 20, சங்கர், 46, காட்டாங்கொளத்துார் பகுதியை சேர்ந்த யுவராஜ், 35, உள்ளிட்டோர், இறைச்சிக்காக கலாவின் பசு மாட்டை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, மூவரையும் நேற்று காலை கைது செய்த போலீசார், யுவராஜ் வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாட்டினை உயிருடன் மீட்டனர்.
விசாரணைக்கு பின், மூவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.