/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் விபத்து மூன்று பேருக்கு காயம்
/
கூடுவாஞ்சேரியில் விபத்து மூன்று பேருக்கு காயம்
ADDED : ஜூன் 13, 2024 12:13 AM

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி, நேற்று மதியம் கனரக கலவை இயந்திர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அது, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் வந்த போது, அந்த வாகனத்தின் பின்னால், ஒரு கார் வந்தது. அதில், இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இருந்தனர்.
அப்போது, கார் கனரக வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது, கனரக வாகனத்தின் பின்பக்கத்தில் திடீரென மோதியது. மோதிய வேகத்தில், கார் சாலையின் நடுவில் உள்ள மையத்தடுப்பில் துாக்கி வீசப்பட்டது.இதில், காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு, லேசான காயம் ஏற்பட்டது. இதனால், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து குறித்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.