/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா
/
திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா
திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா
திருத்தேரி அம்மச்சார் அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா
ADDED : மே 13, 2024 03:33 AM

செங்கல்பட்டு : சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில், ஜி.எஸ்.டி., சாலை அருகில், பிள்ளையார் கோவில் குளக்கரை அருகே, அம்மச்சார் அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது வழக்கம். அதுபோல, இந்தாண்டும் நேற்று அம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி, முன்னதாக, கடந்த 10ம் தேதி அம்மனுக்கு ஊரணி பொங்கலும், நேற்று முன்தினம் அன்னதானமும் நடைபெற்றன.
தொடர்ந்து, நேற்று பெண்கள் தலையில் கூழ் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு கூழ் ஊற்றினர்.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பின், அம்மனுக்கு சாற்றிய சேலைகளை ஏலம் விட்டனர்.
இதனை, பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். விழாவில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.