/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுலா கழக பெட்ரோல் பங்க் இரவிலும் இயக்க கோரிக்கை
/
சுற்றுலா கழக பெட்ரோல் பங்க் இரவிலும் இயக்க கோரிக்கை
சுற்றுலா கழக பெட்ரோல் பங்க் இரவிலும் இயக்க கோரிக்கை
சுற்றுலா கழக பெட்ரோல் பங்க் இரவிலும் இயக்க கோரிக்கை
ADDED : மார் 02, 2025 11:35 PM
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், பகலில் மட்டுமே இயங்கும் சுற்றுலா வளர்ச்சிக் கழக பெட்ரோல் பங்க், இரவிலும் இயங்க வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், பெட்ரோல் பங்க் இயங்குகிறது.
சுற்றுலா வளர்ச்சிக் கழகம், அதன் கடற்கரை விடுதி நிர்வாகத்தின் கீழ், இந்த 'பங்க்'கை நிர்வகிக்கிறது.
சுற்றுலா பகுதிக்கு வரும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் கடக்கும் வாகனங்கள் எரிபொருள் தேவை கருதி, இந்த பங்க் ஏற்படுத்தப்பட்டது.
துவக்க காலம் முதல், 24 மணி நேரம் இயங்கியது. இவ்வழியில் கடக்கும் வாகனங்கள் எரிபொருள் நிரப்பி பயனடைந்தன.
நாளடைவில், இரவு நேர விற்பனை சரிந்த நிலையில், கடந்த ஆண்டு இரவு நேரத்தில் மூடப்பட்டது. இங்கு அனைத்து தனியார் பங்குகளும், இரவில் மூடப்படும் நிலையில், அரசு பங்க் இரவில் செயல்படும் என நம்பி, எரிபொருள் நிரப்பச் சென்று, பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர்.
வியாபாரம் மட்டும் கருதாமல், சுற்றுலா பகுதி சேவை கருதி, சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இரவிலும் இந்த பெட்ரோல் பங்க்கை திறக்க வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.