/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு ஒன்றிய லாபத்தொகை கடன் சங்கத்தினர் ஒப்படைப்பு
/
கூட்டுறவு ஒன்றிய லாபத்தொகை கடன் சங்கத்தினர் ஒப்படைப்பு
கூட்டுறவு ஒன்றிய லாபத்தொகை கடன் சங்கத்தினர் ஒப்படைப்பு
கூட்டுறவு ஒன்றிய லாபத்தொகை கடன் சங்கத்தினர் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 18, 2024 05:21 AM
செங்கல்பட்டு, : சென்னை, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் லாபத் தொகையிலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றி யத்திற்கு சேர வேண்டிய லாபத்தொகை, நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இதில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி 6 லட்சத்து 13 ஆயிரத்து 268 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி 4 லட்சத்து 8 ஆயிரத்து 845 ரூபாய் மற்றும் ஆண்டு சந்தா 2,500 ரூபாய் என, மொத்தம் 10 லட்சத்து 24 ஆயிரத்து 613 ரூபாயை, செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமாரிடம், நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் பாலாஜி, கண்காணிப்பாளர் வேணுகோபால், ஒன்றியமேலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல், செங்கல்பட்டு மின் திட்ட பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய கடன் சங்க லாபத்தொகையிலிருந்து, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியாக,2 லட்சத்து 9 ஆயிரத்து 263 ரூபாய் அளித்தனர்.
கூட்டுறவு கல்வி நிதியாக, 1 லட்சத்து 37 ஆயிரத்து 842 ரூபாய் என, மொத்தம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 105 ரூபாயை, செங்கல்பட்டு மண்டலகூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்நந்தகுமாரிடம் வழங்கினார்.
சங்கத்தின் செயலாட்சியர் சுரின்விஜய், செயலர்அருணகிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.