/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்
/
உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 31, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில், ஆயுதப்படை உதவி கமிஷனராக பணிபுரிந்த ராஜா, தி.நகர் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடையாறு போக்குவரத்து உதவி கமிஷனர் திருவேங்கடம், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில், ஆயுதப்படை உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.
தி.நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த உதவி கமிஷனர் கொடிசெல்வன், அடையாறுபோக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இவர்கள் உட்பட நான்கு உதவி கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.