/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமந்தபுரம் சாலையில் மின் விளக்கின்றி அவதி
/
அனுமந்தபுரம் சாலையில் மின் விளக்கின்றி அவதி
ADDED : மார் 11, 2025 11:38 PM

மறைமலைநகர்:சிங்கபெருமாள்கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையைப் பயன்படுத்தி தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குச் செல்ல, இந்த சாலையே பிரதான சாலை.
இந்த சாலையில், தென்மேல்பாக்கம் -- கொண்டமங்கலம் இடையே 1.5 கி.மீ., துாரம் மின் விளக்குகள் இல்லாததால், சுற்றியுள்ள கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அதனால், அனுமந்தபுரம் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் தென்மேல்பாக்கம் - -கொண்டமங்கலம் இடையே, சாலையின் இருபுறமும் அடந்த காப்புக் காடுகள் உள்ளன.
விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தில் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.