/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி கலங்கல், மதகுகளில் மது அருந்தி அட்டகாசம்
/
ஏரி கலங்கல், மதகுகளில் மது அருந்தி அட்டகாசம்
ADDED : மே 28, 2024 06:35 AM
திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், சாலை பகுதி மறைவிடம், பாலம், ஆட்கள் வராத பழைய கட்டடம் உள்ளிட்ட இடங்களில், பிறருக்கு இடையூறாக மது அருந்துகின்றனர்.
தற்போது, வறண்ட ஏரிகளிலும், கலங்கல், மதகு ஆகியவற்றிலும், கும்பலாக மது அருந்துகின்றனர். காலி மது பாட்டில்கள், காலி குடிநீர், நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளை, அங்கு ஏரியில் வீசியெறிகின்றனர்.
இத்தகைய குப்பையால் ஏரிகள் மாசடைகின்றன. மதகுகளில் மது பாட்டில்கள் உள்ளிட்டவை குவிந்து, அடைந்து துார்கின்றன.
மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், பாலித்தீன் பாக்கெட்டுகளை உண்டு பாதிக்கப்படுகின்றன. ஏரிகளில் மது அருந்துவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.