/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ -- வீலரில் டிராக்டர் மோதி வாலிபர் பலி
/
டூ -- வீலரில் டிராக்டர் மோதி வாலிபர் பலி
ADDED : ஜூன் 29, 2024 01:57 AM

மறைமலை நகர்:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்அர்ஜுனன், 22. இவர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டியில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அர்ஜுனன், நேற்று மாலை வேலை முடிந்து, ஒரகடத்தில் இருந்து தன் 'ஹீரோ பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் பெட்ரோல் பங்க் அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்திசையில் வந்த டிராக்டர் மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட அர்ஜுனன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், அர்ஜுனன் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவரான சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சுகுமாரன், 48, என்பவரிடம் விசாரித்துவருகின்றனர்.