/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ -- வீலரில் கஞ்சா கடத்தியவர் கைது
/
டூ -- வீலரில் கஞ்சா கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 17, 2024 10:37 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வேதநாராயணபுரத்தில், நேற்று முன்தினம் இரவு, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக 'ஹீரோ பிளஷர்' இருசக்கர வாகனத்தில் வந்த நபர், போலீசார் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து, வலது காலில் முறிவு ஏற்பட்டது.
அந்த நபரை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபின், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் சென்னை, கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த மணி என்ற அட்டை மணி, 30, என்பதும், அவர் மீது கஞ்சா, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
மணியின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்து தெரிய வந்தது. மணியிடம் கஞ்சா குறித்து விசாரித்தபோது, பாலுார் கிராமத்தில் தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிகிச்சைக்கு பின் மணியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.