/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எண்ணெய் கடையில் திருடிய இருவர் கைது
/
எண்ணெய் கடையில் திருடிய இருவர் கைது
ADDED : செப் 14, 2024 08:08 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஏகாட்டூரில் மணிகண்டன், 32, என்பவர் சமையல் எண்ணெய் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 12ம் தேதி இரவு 9:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, கடையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த 14,000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மணிகண்டன் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடையில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், இரண்டு நபர்கள் கடையின் பூட்டை உடைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இது தொடர்பாக, சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், 19, விக்னேஷ், 23, என்பவர்களை கைது செய்தனர்.