/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் திருடர்கள் இருவர் செங்கல்பட்டில் கைது
/
பைக் திருடர்கள் இருவர் செங்கல்பட்டில் கைது
ADDED : ஏப் 17, 2024 09:16 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலம் அருகில், செங்கல்பட்டு நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுஇருந்தனர்.
அப்போது, இருசக்கரவாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி வந்த இரண்டு பேரை மடக்கி விசாரணை நடத்தினர். இருவரும், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.
மேலும், இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் ஏதும் இல்லாததால்,இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் சென்னை, பல்லாவரம் பகுதியை சேர்ந்த ராஜா, 24, ராமநாதபுரத்தை சேர்ந்த ஆனந்த், 24,என்பதும், இருவரும் புறநகர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

