/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை நபர்களை தாக்கி பணம் பறிப்பு தாம்பரம் ஏட்டு உட்பட இருவர் கைது
/
போதை நபர்களை தாக்கி பணம் பறிப்பு தாம்பரம் ஏட்டு உட்பட இருவர் கைது
போதை நபர்களை தாக்கி பணம் பறிப்பு தாம்பரம் ஏட்டு உட்பட இருவர் கைது
போதை நபர்களை தாக்கி பணம் பறிப்பு தாம்பரம் ஏட்டு உட்பட இருவர் கைது
ADDED : செப் 05, 2024 01:33 AM

தாம்பரம்:தஞ்சாவூரைச் சேர்ந்தோர் மணிவண்ணன், 33, ரமேஷ்குமார், 38. கிழக்கு தாம்பரத்தில் தங்கி, தாம்பரம் ரயில்வே பணிமனையில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிகின்றனர்.
ஆக., 31ம் தேதி இரவு, பணிமனை அருகே இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கு வந்த இருவர், போலீஸ் எனக்கூறி, போதை நபர்களை லத்தியால் தாக்கி, 4,000 ரூபாய் பறித்துள்ளனர்.
இதில், மணிவண்ணனுக்கு இடதுகால் முட்டியில் லேசான காயம், கெண்டை கால் சதையில் வீக்கம் ஏற்பட்டது.
காவல் நிலையத்தில் புகார் அளிக்க பயந்து, மாற்று யோசனையாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு, தங்களுக்கு அடிபட்டது குறித்து, மருத்துவமனை டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார், அவர்களிடம் புகார் பெற்றனர். அடையாளமாக, 'பல்சர்' பைக்கில் வந்த தகவலையும் பெற்றனர்.
விசாரணையில், போதை நபர்களை தாக்கி பணம் பறித்தது, தாம்பரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் அருள்ராஜ், 46, என்பதும், கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றிய சதீஷ், 31, என்பதும் தெரியவந்தது. போலீசார், நேற்று முன்தினம், இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், இரவில் தனிமையில் இருக்கும் ஜோடிகள், மது அருந்துவோர், திருநங்கையரை தாக்கி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.