/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபரை தாக்கி டூ - வீலர் மொபைல் போன் திருட்டு
/
வாலிபரை தாக்கி டூ - வீலர் மொபைல் போன் திருட்டு
ADDED : ஜூன் 22, 2024 11:31 PM
செங்கல்பட்டு : திருக்கழுக்குன்றம் அடுத்த பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல், 26; மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வேலை முடித்து விட்டு, தன் 'பஜார் பல்சர்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம், கொல்லைமேடு சுடுகாடு அருகே வந்த போது, டேனியலை மடக்கிய இரண்டு மர்ம நபர்கள், அவரை கத்தியால் தாக்கி கீழே தள்ளிவிட்டு, மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.
இது குறித்து, டேனியல் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.