/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பனையூரில் சாலை விபத்து டூ - வீலரில் சென்றவர் பலி
/
பனையூரில் சாலை விபத்து டூ - வீலரில் சென்றவர் பலி
ADDED : ஆக 06, 2024 12:06 AM
செய்யூர்:செய்யூர் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 52. கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தனது ஆக்டிவா இருசக்கர வாகனத்தை, வெண்ணாங்குப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, ஆடி அமாவாசைக்காக, பேருந்து வாயிலாக மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
சுவாமி தரிசனம் முடிந்து, நேற்று காலை வெண்ணாங்குப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது, பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற செய்யூர் போலீசார், வழக்குப்பதிந்து, சிவக்குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.