/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கண்ணசந்த நேரத்தில் டூ - வீலர் திருட்டு
/
கண்ணசந்த நேரத்தில் டூ - வீலர் திருட்டு
ADDED : செப் 13, 2024 10:01 PM
மதுராந்தகம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, 43.
இவர், நேற்று முன்தினம், கள்ளக்குறிச்சியில் இருந்து, சென்னைக்கு வேலைக்கு செல்வதற்காக, தன் ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
மதுராந்தகம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, துாக்கக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், சாலையோரம், கருங்குழி பகுதியில் உள்ள கோவில் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கேயே உறங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதுகுறித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில், இளையராஜா புகார் அளித்துள்ளார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.