/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர்- - நெல்லிக்குப்பம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
/
திருப்போரூர்- - நெல்லிக்குப்பம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
திருப்போரூர்- - நெல்லிக்குப்பம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
திருப்போரூர்- - நெல்லிக்குப்பம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2024 11:40 PM

திருப்போரூர்:திருப்போரூர்- - நெல்லிக்குப்பம் சாலையில், இள்ளலுார், வெண்பேடு, காட்டூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இச்சாலையில், இள்ளலுாரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் வாயிலாக குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
காட்டூர் சந்திப்பிலிருந்து செம்பாக்கம், காயார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சாலை பிரிந்து செல்கிறது. அம்மாபேட்டை பகுதியில், பிரபல தனியார் மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி, தனியார் பள்ளி, அடுக்குமாடி குடியிருப்பு, தொழில் நிறுவனங்கள் உள்ளன.
நெல்லிக்குப்பம் சந்திப்பிலிருந்து கூடுவாஞ்சேரி, கொட்டமேடு, கருநீலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, சாலை பிரிந்து செல்கிறது. அதேபோல், திருப்போரூர் - நெல்லிக்குப்பம் சாலை இடையே உள்ள அனைத்து பகுதிகளிலும், பல மனை பிரிவுகள் உருவாகியுள்ளன.
இதனால், இச்சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பெற்றோர், வேலைக்கு செல்வோர் என, தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். தண்ணீர் லாரிகள் உட்பட பல கனரக வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், சாலை குறுகிய நிலையில் உள்ளதால், வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்லும்போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இச்சாலையில் திருப்போரூர் அருகே மதுபான கடை இருப்பதால், மது வாங்கி குடித்துவிட்டு, வாகனங்களில் தடுமாறி செல்லும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், சில இடங்களில் மின் விளக்கு வசதி இல்லாததால், அடிக்கடி இரவு நேரங்களில் இரு சக்கர வாகன விபத்துகள் நடக்கின்றன.
எனவே, திருப்போரூர் - -நெல்லிக்குப்பம் சாலையை விரிவாக்கம் செய்யவும், தெரு விளக்கு வசதி ஏற்படுத்தவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

