ADDED : ஆக 11, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின், செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று மாமண்டூரில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் ராஜன் சேதுபதி, மாநில பொதுச் செயலர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இந்த செங்கல் பட்டு மாவட்ட பொதுக்குழுவில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.