/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரதர் பெருமாள் கோவில் ரூ. 57.20 லட்சம் வருவாய்
/
வரதர் பெருமாள் கோவில் ரூ. 57.20 லட்சம் வருவாய்
ADDED : பிப் 26, 2025 11:55 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தும் காணிக்கை, ஹிந்து அறநிலையத்துறை சார்பில் எண்ணப்படுகிறது.
அதன்படி, கோவிலில் உள்ள 11 உண்டியல் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு பக்தர்கள், தன்னார்வலர்கள், துறை ஊழியர்கள் வாயிலாக எண்ணப்பட்டது.
இதில், 57 லட்சத்து 20, 727 ரூபாய் ரொக்கமும்,91 கிராம் தங்கமும், 311 கிராம் வெள்ளியும், கோவிலுக்கு வருவாயாககிடைத்துள்ளது என, கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.