/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீரபோகம் அங்கன்வாடி கட்டட பணி 2 மாதமாக நிறுத்தப்பட்டதால் பாதிப்பு
/
வீரபோகம் அங்கன்வாடி கட்டட பணி 2 மாதமாக நிறுத்தப்பட்டதால் பாதிப்பு
வீரபோகம் அங்கன்வாடி கட்டட பணி 2 மாதமாக நிறுத்தப்பட்டதால் பாதிப்பு
வீரபோகம் அங்கன்வாடி கட்டட பணி 2 மாதமாக நிறுத்தப்பட்டதால் பாதிப்பு
ADDED : ஆக 11, 2024 02:31 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே வீரபோகம் ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நியாய விலைக்கடை அருகே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயல்படுகிறது.
அங்கன்வாடி மையத்தில், 10 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
தனியார் கட்டடத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்கும் பணி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நிறுத்தப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.