/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணிவகுத்து நிறுத்தப்படும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
/
அணிவகுத்து நிறுத்தப்படும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
அணிவகுத்து நிறுத்தப்படும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
அணிவகுத்து நிறுத்தப்படும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : பிப் 27, 2025 11:51 PM

மறைமலைநகர், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு அடுத்த பரனுார் பகுதியில் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் இந்த சுங்கச்சாவடி வழியாக கடந்து சென்று வருகின்றன.
இந்த சுங்கச்சாவடியை ஒட்டி சாலையின் இருபுறமும் இளநீர் கடை, டீ கடை உள்ளிட்ட கடைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் சாலை ஓரம் மற்றும் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு, கடைகளுக்குச் சென்று விடுகின்றனர்.
இரவு நேரங்களிலும் இதுபோன்று, சுங்கச்சாவடி முதல் மகேந்திராசிட்டி வரை தொடர்ந்து நிறுத்தப்படும் வாகனங்களால், சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலையை ஓட்டி இருபுறமும் 500 மீட்டர் துாரம் வரை கடைகள் உள்ளதால், வழி நெடுகிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
வாகன ஓட்டிகள் கடைக்கு சென்று வந்து மீண்டும் வாகனங்களை எடுக்கும் போது, நெடுஞ்சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
சாலை நடுவே செல்லும்வாகனங்கள், கடைகளை கண்டதும் உடனடியாக திரும்புவதால், சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு அடிக்கடி வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மறைமலைநகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் திருத்தேரி, மகேந்திரா சிட்டி, பாரேரி, சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலை ஓரங்களில், இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வு எடுக்கின்றனர்.
இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.