/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம வாலிபால் போட்டி அங்கம்பாக்கம் முதலிடம்
/
கிராம வாலிபால் போட்டி அங்கம்பாக்கம் முதலிடம்
ADDED : ஏப் 30, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்;வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில், இளைஞர்கள் இடையே வாலிபால் விளையாட்டுப் போட்டி நேற்று நடந்தது. இதில், 19 அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில், அங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அணி முதலிடம். தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அணி இரண்டாவது இடம்.
அவளுர் கிராமத்தைச் சேர்ந்த அணி மூன்றாம் இடம். உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த அணி நான்காவது இடம் பெற்றுள்ளன.
இவர்களுக்கு, கோப்பை மற்றும் ரொக்கப் பரிசினை தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் வழங்கினார். விளையாட்டு போட்டிகளுக்குரிய ஏற்பாடுகளை தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் செய்திருந்தனர்.