/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடை இல்லாமல் மேலகண்டை கிராமத்தினர் அவதி
/
பயணியர் நிழற்குடை இல்லாமல் மேலகண்டை கிராமத்தினர் அவதி
பயணியர் நிழற்குடை இல்லாமல் மேலகண்டை கிராமத்தினர் அவதி
பயணியர் நிழற்குடை இல்லாமல் மேலகண்டை கிராமத்தினர் அவதி
ADDED : மார் 28, 2024 10:09 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த மேலகண்டை கிராமத்தில், ஆயிரத் துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
தினசரி பள்ளி, கல்லுாரி,வேலைக்கு செல்வோர், செங்கல்பட்டு, தாம்பரம்,கூவத்துார், மதுராந்தகம், பவுஞ்சூர் போன்ற வெளியூர்களுக்கு செல்வோர், கிராமத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர்.
சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால், கடந்த ஆண்டு மேலகண்டை கிராமத்தில் இருந்த பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தற்போது வரை மீண்டும் பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை.
அதனால், தினசரி பேருந்திற்காக காத்திருக்கும் கிராமவாசிகள், நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டு காத்திருப்பதால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மேலகண்டை கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

