sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

/

கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவளத்தில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்


ADDED : ஆக 30, 2024 12:42 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்,:விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், பொது இடத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர்.

அவற்றை, செங்கை மாவட்டத்தில், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் கரைக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக், கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி ஆகியோர், நேற்று கோவளம் கடலில் சிலைகள் கரைக்கும் பகுதியை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, செங்கல்பட்டு சப் -- -கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன், போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் மீனா, பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன், தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார், உதவி கமிஷனர் வெங்கடேசன், பி.டி.ஓ., சிவகலைசெல்வன், ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் உட்பட பலர் இருந்தனர்.

சிலைகள் ஏற்றிவரும் வாகனங்களை அனுமதிப்பது, அவை கடற்கரை செல்லும் மற்றும் வெளியேறும் வகையில் அணுகு பாதை அமைப்பது, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி, சிலைகளை கடலில் இறக்குவதற்கான கிரேன் இயந்திர வசதி ஏற்படுத்துவது, தீயணைப்பு வீரர்கள், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிசிடிவி' கட்டாயம்


மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதி போலீஸ் நிலையங்களில், ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினருடனான ஆலோசனை கூட்டத்தை, போலீசார் நடத்தினர்.
அப்போது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைப்பது குறித்து, போலீசார் அறிவுறுத்தியதாவது:முந்தைய ஆண்டுகளில் விநாயகர் சிலை வைத்த இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். புதிய இடத்தில் சிலை வைக்கக் கூடாது. வருவாய், காவல் ஆகிய துறைகளின் தடையில்லா சான்று, மின் வாரிய அனுமதி பெறவேண்டும்.
10 அடி உயர சிலை மட்டுமே வைக்க அனுமதிக்கப்படும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைக்கு அனுமதியில்லை. சிலை வைக்கும் இடத்தில், தகர கொட்டகை அமைத்து, சிலை பாதுகாப்பிற்காக இரண்டு சிசிடிவி' கேமராக்கள் அமைக்க வேண்டும். பாதுகாப்பிற்கு ஆட்கள் இருபபது கட்டாயம். முதலுதவி சிகிச்சை பெட்டியும் அவசியம்.இவ்வாறு போலீசார் அறிவுறுத்தினர்.








      Dinamalar
      Follow us