/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்குறுதி தரும் கட்சிக்கே ஓட்டு கீரப்பாக்கம் ஊராட்சியில் முடிவு கீரப்பாக்கம் ஊராட்சியில் முடிவு

ADDED : மார் 22, 2024 10:03 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள், தங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்குத்தான் ஓட்டளிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
முருகமங்கலம், கீரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் வசிப்போருக்கு, கடந்த 2018ல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை.
வீடு மற்றும் இடம் இல்லாத 70 ஏழை, எளிய குடும்பத்திற்கு, முருகமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கீரப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும்.
கீரப்பாக்கம் மற்றும் முருகமங்கலம் கிராமங்களை, கிளாம்பாக்கம் புதிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து, சமுதாய நலக்கூடம், சிறுவர் பூங்கா போன்ற வசதிகளை செய்து தர வேண்டும்.
எங்களின் இந்த குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு வாக்குறுதி அளிக்கும் கட்சிக்குத் தான் ஓட்டளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.