/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணி துவக்கம்
/
ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணி துவக்கம்
ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணி துவக்கம்
ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணி துவக்கம்
ADDED : ஆக 06, 2024 02:36 AM

பொன்விளைந்தகளத்துார்:செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில், மின்சார ரயில்கள் மட்டும் நின்று செல்கின்றன. பொன்விளைந்தகளத்துாரைச் சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இங்கு நடைமேம்பாலம் இல்லாததால், ரயில் தண்டவாளத்தை கடந்து, ஆபத்தான முறையில் நடை மேடைகளுக்கு பயணியர் சென்று வருகின்றனர்.
எனவே, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனை பரிசீலனை செய்த ரயில்வே நிர்வாகம்,நடை மேம்பாலம் அமைக்கவும், மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை அமைக்கவும், கடந்த ஆண்டு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.இப்பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
மழைக்காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்திவருகின்றனர்.