/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இழப்பீடு தராத நிறுவனத்துக்கு வாரன்ட் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
/
இழப்பீடு தராத நிறுவனத்துக்கு வாரன்ட் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
இழப்பீடு தராத நிறுவனத்துக்கு வாரன்ட் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
இழப்பீடு தராத நிறுவனத்துக்கு வாரன்ட் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு
ADDED : செப் 14, 2024 08:04 PM
சென்னை:குறிப்பிட்ட காலத்தில் வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நபருக்கு, இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி பகுதியில், 'கிரீன் அவென்யூ ஹோம்ஸ் அண்ட் கார்டன்ஸ்' நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, ராணி வேலம்மாள் என்பவர் முன்பதிவு செய்து பணம் செலுத்தினார்.
இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட கால கெடுவுக்குள் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது தொடர்பான புகாரை விசாரித்த ஆணையம், மனுதாரர் செலுத்திய தொகையை திருப்பி கொடுப்பதுடன், அதற்கான வட்டியை இழப்பீடாக கொடுக்க, 2022ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வழக்கை மீண்டும் விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஆணைய உத்தரவுப்படி கட்டுமான நிறுவனம், 36 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு அளித்து இருக்க வேண்டும். ஆனால், அந்நிறுவனம் இதை செயல்படுத்த மறுத்து வருகிறது.
எனவே, வருவாய் மீட்பு சட்டப்படி, வாரன்ட் பிறப்பித்து, அந்நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டு தொகையை வசூலிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.