sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரி பாசனத்திற்கான மதகுகள் பழுது தண்ணீர் வீணாகி- விவசாயிகள் வேதனை

/

ஏரி பாசனத்திற்கான மதகுகள் பழுது தண்ணீர் வீணாகி- விவசாயிகள் வேதனை

ஏரி பாசனத்திற்கான மதகுகள் பழுது தண்ணீர் வீணாகி- விவசாயிகள் வேதனை

ஏரி பாசனத்திற்கான மதகுகள் பழுது தண்ணீர் வீணாகி- விவசாயிகள் வேதனை


ADDED : மார் 08, 2025 11:48 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், மதுராந்தகம் அருகே ஏரி பாசன மதகு பழுதால், நெல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம், கருணாகரச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது, பள்ளியகரம் கிராமம்.

இங்கு, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஏரி உள்ளது.

இந்த ஏரி பாசன நீரை பயன்படுத்தி, மூன்று மதகுகள் வழியாக நீர் கொண்டு சென்று, 350 ஏக்கர் நன்செய் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் உள்ள இரண்டு மதகுகளில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது.

ஆண்டுதோறும் பருவ மழைக் காலங்களில், விவசாயிகள் தங்கள் சொந்த செலவில்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக மதகு பகுதியில் மண் கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கியும், தண்ணீர் வெளியேறுவதை தடுத்து வந்தனர்.

விவசாய பயன்பாட்டிற்கு தேவைப்படும் போது, மண் மூட்டைகளை அப்புறப்படுத்தி, தண்ணீர் திறந்து பயன்படுத்தி வருகின்றனர்.

பழுதடைந்த இரு மதகுகளையும் புதிதாக கட்டித் தரக்கோரி, நீர்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, கோடை காலத்தில் தண்ணீர் இல்லாத போது, புதிய மதகுகள் கட்டி, தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியகரம் ஏரி மதகுகள் பழுது குறித்தும், புதிதாக கட்டுவதற்கு திட்டம் வகுத்தும், கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

அதற்கான நிதி கிடைத்தவுடன், புதிய மதகுகள் கட்டித் தரப்படும்.

- பரத்,

உதவி பொறியாளர்,

பொதுப்பணி துறை, மதுராந்தகம்.

பள்ளியகரம் ஏரியில், இரண்டு பாசன மதகுகள் உடைந்து உள்ளன.

மழைக்காலங்களில் மணல் மூட்டைகள் கொண்டு, தண்ணீர் வெளியேறுவதை தடுத்து வந்தோம்.

இருப்பினும், மதகுகள் பழுது காரணமாக, தண்ணீர் வீணாக வெளியேறியது.

அதனால், தற்போது நெல் பயிர்களுக்கு, போதிய அளவு தண்ணீர் இல்லாததால், நெல் விளைச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள், நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து மதகுகளை கட்டித் தர வேண்டும்.

- வீரராகவன், 50,

விவசாயி, பள்ளியகரம்.






      Dinamalar
      Follow us