/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் விவசாய பணியில் மேற்கு வங்க தொழிலாளர்கள்
/
செங்கையில் விவசாய பணியில் மேற்கு வங்க தொழிலாளர்கள்
செங்கையில் விவசாய பணியில் மேற்கு வங்க தொழிலாளர்கள்
செங்கையில் விவசாய பணியில் மேற்கு வங்க தொழிலாளர்கள்
ADDED : ஜூன் 10, 2024 11:19 PM

மாமல்லபுரம் : தமிழகத்தில், கட்டுமானம், ஹோட்டல், பிற கூலித்தொழில்களில், தற்போது, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களையே, தமிழக மக்கள் அதிகம் ஈடுபடுத்துகின்றனர்.
அவர்களை வரவழைக்க, இங்கு தரகர்கள் உள்ளனர். குறைவான கூலியில், நிறைவான பணி செய்யும் அவர்களையே, நம்மவர்கள் நாடுகின்றனர்.
இந்நிலையில், விவசாயத்திலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நெற்பயிர் நாற்று நடுவதில், மேற்குவங்க மாநில தொழிலாளர்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கத்தில், நாற்று நடும் பணியில் மேற்கு வங்கத்தினரை ஈடுபடுத்திய லட்சாதிபதி கூறியதாவது:
நாற்று நடவு, நாற்றுப் பறிப்பு, அவற்றை கொண்டு செல்வது என, தனித்தனியே தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 8,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. கூலி ஆட்கள் கிடைப்பதும் அரிதாக உள்ளது.
பொன்னேரி பகுதியில், மேற்கு வங்க தொழிலாளர்கள் நாற்று நடுவதை அறிந்து, 20 பேரை அழைத்து வந்தேன். ஒரு ஏக்கர் நடவிற்கு, மொத்த செலவு 4,500 ரூபாய்.
காலை 6:00 மணிக்கே, நாற்று நடும் பணியை துவக்கி விடுகின்றனர். நேர்த்தியாகவும் நடுவதால், கூடுதலாகவும் விளையும். ஊதியத்துடன், ரேஷன் அரிசி, சமையல் எரிவாயு மட்டும் கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.