/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
22 கிலோ கஞ்சா கடத்திய மேற்கு வங்க நபர் கைது
/
22 கிலோ கஞ்சா கடத்திய மேற்கு வங்க நபர் கைது
ADDED : பிப் 25, 2025 11:55 PM

தாம்பரம்,தாம்பரம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், சென்னை புறவழிச்சாலை அணுகு சாலை அருகே, நேற்று பெரிய பையுடன் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், மேற்குவங்கம், கோபர்தன்பூர் பர்த்தமன் மாவட்டத்தை சேர்ந்த மோட்டிபுல் சேக், 30, என்பது தெரிந்தது.
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த அவர், தாம்பரம், பல்லாவரம் சுற்றுப்புற பகுதிகளில், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது, விசாரணையில் தெரியவந்தது.

